உணவினை உட்க்கொண்ட பிறகு வெந்நீரினை அருந்துவதனால் உடனடியாக ஜீரணமாகி விடும்.
வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது.
அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும்.
வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும் நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும் வெந்நீரில் கரைந்து விடும்.
அதிக உடல் எடையினால் பலரும் அவதிப்படுகின்றனர் .தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு, தினமும் காலையில் மிதமான சுடுநீரைக் குடித்து வந்தால் நல்ல பலனை பெற்றுக்கொள்ளலாம் .
வெந்நீர் அருந்துவதால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். உயர் ரத்த அழுத்தம், கீழ் வாதம், மன அழுத்தம் போன்றவை கட்டுப்படும்.
எனவே இவ்வாறான நன்மைகளினைக் கொண்ட வெந்நீரினைக் குடித்து ,அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளினை பெற்றுக்கொள்ளுங்கள் .