Internet கண்டுபிடிக்கப்பட்டதற்கு பிறகு பயணம் நமக்கு மிகவும் சௌகரியமானதாக மாறிவிட்டது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்கள் செல்ல நினைக்கும் இடத்தை தேடினால் மட்டும் போதும். உங்களுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் கிடைத்துவிடும்.
Google Maps சேவை உலகம் முழுவதும் உள்ள லொகேஷன்கள் மற்றும் பகுதிகளின் விரிவான தரவுகளை வழங்குகிறது. நிலையான வீதி வரைபடங்களுடன் Google Maps பல்வேறு இடங்களில் செட்டிலைட் மற்றும் ஏரியல் புகைப்படங்களை வழங்குகிறது.
இன்னும் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் அங்குள்ள டிராஃபிக் போன்றவற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இது அத்தியாவசியமானதாக இருந்தாலும் எல்லா நேரங்களிலும் இந்த வொய்ஸ் கமண்ட் அம்சத்தை அனைத்து யூசர்களும் விரும்புவதில்லை.
ஒருவேளை நீங்கள் Google Maps அப்ளிகேஷனில் உள்ள வொய்ஸ் நேவிகேஷன் ஒப்ஷனை டிசேபிள் செய்ய நினைத்தால் கீழே இருக்கக்கூடிய படிகளை பின்பற்றுங்கள்:
உங்களது அண்ட்ராய்டு அல்லது iOS சாதனத்தில் உள்ள Google Maps அப்ளிகேஷனை திறக்கவும்.
உங்களது பயணத்தை நீங்கள் எங்கிருந்து ஆரம்பிக்க போகிறீர்கள் மற்றும் நீங்கள் பார்வையிட நினைக்கும் இடம் எது என்பது போன்ற விபரங்களை என்டர் செய்யவும்.
நேரம் மற்றும் தூரம் போன்ற விபரங்கள் ஸ்கிரீனில் திரையிடப்பட்டதும் “Start” ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களது பயணம் துவங்கிவிடும்.
ஸ்கிரீனின் மேல் வலது மூலையில் காணப்படும் சவுண்ட் ஐகானை தட்டவும். அதில் “Mute” அல்லது “Alerts only” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். இவ்வாறு செய்வது வொய்ஸ் கமாண்ட் அம்சத்தை டிசேபிள் செய்துவிடும். இதற்கு மேற்படி நீங்கள் கூகுள் மேப்ஸ் அப்ளிகேஷனில் லொகேஷனை பார்ப்பதன் மூலமாக மட்டுமே தெரிந்து கொள்ளலாம்.
ஒருவேளை நீங்கள் வொய்ஸ் நேவிகேஷன் அம்சத்தை குறிப்பிட்ட வால்யூமில் பயன்படுத்துவதற்கு விரும்புகிறீர்களானால் பின்வரும் படிகளை பின்பற்றுங்கள்:
Google Maps அப்ளிகேஷனை திறக்கவும்.
“Search” பாருக்கு அருகில் காணப்படும் உங்களது கூகுள் ப்ரொபைலை காட்டும் வட்ட வடிவ ஐகனை கிளிக் செய்யுங்கள்.
கொடுக்கப்பட்டுள்ள அப்ஷன்களின் பட்டியலை கீழே ஸ்க்ரோல் செய்து “Settings.” என்பதை தேர்வு செய்யவும்.
“Softer,” “Normal,” மற்றும் “Louder” என்ற மூன்று வால்யூம் ஆப்ஷன்களை கொண்ட ஒரு பக்கத்திற்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றை தேர்வு செய்யவும்.