சமைக்காத கோழி இறைச்சியை கடந்த 17 நாட்களாக சாப்பிட்டு வரும் அமெரிக்க இளைஞர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி அவை வைரலாகியுள்ளன.
தினமும் சமைக்காத கோழி இறைச்சியை உட்கொண்டு வரும் இவர் தனக்கு வயிற்று வலி வரும் வரை தான் அதை தொடர்ந்து செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை 17 நாட்கள் தொடர்ச்சியான முறையில் சமைக்காத கோழி இறைச்சியை உட்கொண்டு வரும் இவர் "raw chicken experiment" என்ற தலைப்பில் அதனை காணொளியாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றார்.
அதுமட்டுமன்றி கோழி முட்டைகளையும் பழச்சாறு அருந்துவதையும் தனது பரிசோதனையில் இணைத்துக்கொண்டுள்ளார்.
இந்த பரிசோதனை அவ்வளவு மோசமாக இல்லை என்றும் பச்சையாக சாப்பிடுவதால் சுவை கொஞ்சம் குறைவாக உள்ளது என்றும் குறித்த இளைஞர் கூறியுள்ளார்.