WhatsApp செயலியை தமிழில் " பகிரி" அல்லது புலனம் அல்லது கட்செவி அஞ்சல் " என்றும் அழைக்கின்றனர்.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது.பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது புதிதாக 'Favorite Contact' எனப் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான நபர்கள் அல்லது தினசரி அழைப்பு மேற்கொள்ளும் நபர்களை "Favorite" செய்து வைத்து one tap செய்து அவர்களை அழைக்கலாம்.
இந்த அம்சம் வட்ஸ்அப் கோலிங் ஒப்ஷன் பக்கத்தில் மேலே கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. Favorite Contact செய்து வைப்பதன் மூலம் குறிப்பிட்ட நபரை உடனடியாக தொடர்பு கொள்ள முடியும். இது one-tap calling வசதியாக இருக்கும்.
தற்போது இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.