அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தெறி திரைப்படம், 2016 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். எமி ஜாக்சன், மொட்டை ராஜேந்திரன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான 'பேபி ஜான்' திரைப்படத்தினை இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கி வரும் நிலையில், விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடித்து வரும் நிலையில் ,இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் .
மேலும் எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில், வாமிகா கபி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ஏனைய பிரபலங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் ஆரம்பித்திருந்த நிலையில், தற்போது புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் திகதியை அறிவித்துள்ளது படக்குழு.
இந்த நிலையில் வருகின்ற மே மாதம் 31 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் 'பேபி ஜான்' திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது .