சரியான முகவரியினைச் சொல்வதற்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என பெரியவர் ஒருவர் எழுதி வைத்துள்ள விளம்பரத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
புதிதாக சில இடங்களுக்கு செல்லும் சிலர் சரியான முகவரி தெரியாது திண்டாடுவார்கள். சில நேரங்களில் குறிப்பிட்ட அந்த ஊர்களில் உள்ளவர்களிடம் முகவரியை கேட்டால் கூட சரியான இடத்தினை அறிந்துகொள்ள சிரமப்படுகின்றனர்.
இந்தியாவைச் சேந்த முதியவர் ஒருவர் இவ்வாறானவர்களுக்கு உதவும் அதேவேளை அதனை ஒரு சுயதொழிலாக மாற்றியுள்ளார்.
சரியான முகவரியினை அறிந்துகொள்ள 10 ரூபாய் அறவிடப்படும் என்ற இவரது விளம்பரம் பலருக்கும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இதன் மூலமாக அந்த வயோதிபர் தனது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதனால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக நடந்து வந்து வழி கேட்பவர்களுக்கு 5 ரூபாயும் வாகனத்தில் வந்து கேட்பவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படும் எனவும் அவர் தனது கட்டணத்தை அறவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.