மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பதோடு மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் 'லால் சலாம்' திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகியுள்ள நிலையில்,இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அன்பாளனே' என்ற பாடலின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.தேவா மற்றும் தீப்தி சுரேஷ் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் இரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகின்றது.