Google மெப்ஸ் தற்போது குறிப்பிட்ட இடத்தின் வானிலை மற்றும் காற்றின் தர விபரங்களை எளிதாக பார்க்க அனுமதிக்கிறது. பயனர்கள் இப்போது இருப்பிடத்தைத் தேடலாம் மற்றும் வானிலை ஐகனைக் கிளிக் செய்து முழுமையான வானிலை முன்னறிவிப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதன் மூலம் வானிலை பற்றிய விபரங்களையும் நிகழ்நேர காற்றின் தரக் குறியீடு பற்றிய தகவல்களையும் எளிதாகப் பெறலாம்.
Google மெப்ஸ் இப்போது வலதுப் புறத்தின் மேலே ஒரு சிறிய வானிலை ஐகனைக் கொண்டுள்ளது, வானிலை விபரங்களுக்கு விரைவான அணுகலை வழங்குகிறது, மேலும் விரிவான வானிலை தகவல்களைப் பெற ஐகனைக் கிளிக் செய்யலாம். தற்போது, இந்த அம்சம் Google Maps அப்ஸின் Android மற்றும் iOS பதிப்புகளில் கிடைக்கிறது.
Google மெப்ஸில் வானிலை நிலவரம்
Google மெப்ஸை ஓபன் செய்து உங்கள் விருப்பமான லொக்கேஷனை தேர்ந்தெடுக்கவும். இப்போது இடப்புறத்தில் சிறிதாக weather icon கொடுக்கப்பட்டிருக்கும். அந்த ஐகனை கிளிக் செய்து expand செய்யவும். இப்போது நீங்கள் வானிலை தகவல்களைப் பார்க்க முடியும்.
நீங்கள் எங்காவது சுற்றுலா செல்ல திட்டமிட்டால் குறிப்பிட்ட திகதியில் பயணிக்கத் திட்டமிட்டால், இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அம்சம் நிகழ்நேர காற்றின் தரக் குறியீட்டுடன் அந்த இடத்தின் வானிலை பற்றிய யோசனையையும் உங்களுக்கு வழங்கும். கூகுள் மெப்ஸின் சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.