விஷ்ணு விஷால்,விக்ராந்த் இணைந்து நடித்துள்ள "லால் சலாம்" திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் இந்திய அணி கெப்டன் கபில் தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் "லால் சலாம்" படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
"லால் சலாம்" திரைப்படம் உலகம் முழுவதும் இன்று இரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 'லால் சலாம்' திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.