தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இதைத்தொடர்ந்து விக்ரமின் 62 வது திரைப்படத்தை சித்தா திரைப்பட இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார்.
இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் நிலையில் ,திரைப்படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த ஒக்டோபரில் வெளியாகி இருந்தது .
அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் தற்போது புது அப்டேட் வெளியாகியுள்ளது.
தற்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
இதனால் விக்ரமின் 62 வது திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது .