பீர்க்கங்காய் சாப்பிடுவதன் மூலம் அதிக நன்மைகளினை பெற்றுக்கொள்ள முடியும் . பீர்க்கங்காய் ஒரு சிறந்த ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். அதில் விற்றமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து என அதிக சத்துக்களை உள்ளடக்கியது .
பீர்க்கங்காயில் அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளன . இதனால் மலச்சிக்கலை போக்குவதோடு ,செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
பீர்க்கங்காயில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்களை நீண்ட நேரம் வயிறு நிரம்பியது போன்று உணர வைக்கும்.
இதில் இரும்புச்சத்து மற்றும் விற்றமின் சி அதிகம் உள்ளன . இது இரத்த சோகையை குறைக்க உதவுவதோடு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
கல்லீரல் பாதிப்பினால் அவதிப்படுபவர்கள், பீர்க்கங்காயினை உட்க்கொண்டு வந்தால் நாளடைவில் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் .
எனவே இவ்வாறான நன்மைகளினைக் கொண்ட பீர்க்கங்காயினை உட்க்கொண்டு ,அதனால் கிடைக்க கூடிய நன்மைகளினை பெற்று ஆரோக்கியத்தினை மேம்படுத்திக்கொள்ளுங்கள் .