இவர் அஞ்சான் ,மெர்சல் ,கத்தி தெறி ,நான் ஈ ,குஷி ,சகுந்தலம் பானா காத்தாடி ,நீதானே என் பொன் வசந்தம் போன்ற திரைப்படங்களில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென்று தனி இரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
நடிகர் நாகசைதன்யாவுடன் காதலில் விழுந்து திருமணம் செய்து ,சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா திடீரென மயோடிசிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டார்.தான் நோய் வாய்ப்பட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார் .
ஆனாலும் அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றிய பதிவுகளை பகிர்ந்து வருகிறார் . இந்தநிலையில் சமந்தா தற்போது புதிய காணொளி ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் நான் எப்போது மீண்டும் நடிக்க வருவேன் என பலர் கேட்டிருந்திருந்தீர்கள் . விரைவில் சினிமாவில் நடிக்க இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார் .
சமந்தாவின் இந்த காணொளியினைப் பார்த்து சமந்தா இரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .