Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
13
ஒன்லைன் மோசடி வலைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும் முக்கிய டிப்ஸ்!

SooriyanFM Gossip - ஒன்லைன் மோசடி வலைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும் முக்கிய டிப்ஸ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

292 Views
ஒன்லைன் மோசடிகள் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருவதால், அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கான கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

ஒவ்வொரு நாளும் மோசடிக்காரர்கள் பல்வேறு விதமான புதிய வழிகளை பயன்படுத்தி மக்களை தங்கள் வளைக்குள் ஆழ்த்தி, அவர்களது பணத்தையும், தனி நபர் விபரங்களையும் திருடி வருகின்றனர்.

ஒன்லைன் மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி, போலியான வெப்சைட்டுகளை அடையாளம் காண்பது எப்படி போன்ற ஒரு சில விடயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மோசமான முறையில் எழுதப்பட்ட விபரங்கள்

உங்களுக்கு பார்ட் டைம் வேலை வழங்கக்கூடிய ஒரு இமெயில் வந்திருப்பதாக வைத்து கொள்வோம். அந்த இமெயிலில் எழுதப்பட்டுள்ள விபரங்கள் மிகவும் மோசமான மொழியில் பிழைகளோடு இருக்கிறது என்றால் நிச்சயமாக இது உண்மைதானா என்பதை நீங்கள் சோதித்து பார்க்க வேண்டும்.

இமெயிலில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள், இலக்கணம், எழுத்து பிழை மற்றும் நிறுத்தற்குறிகளில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

வங்கி சார்ந்தவர்கள் அல்லது காவல்துறை போல நடித்து நீங்கள் செய்யாத ஒரு தவறுக்கு உங்களை ஒப்புக்கொள்ள சொல்லும்படி கேட்கலாம். இதற்கு பயந்து தனிப்பட்ட விபரங்களை நீங்கள் உளறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

தனிநபர் விபரங்களை ஒன்லைனில் போஸ்ட் செய்ய வேண்டாம்…

முகவரி மற்றும் தனிநபர் விபரங்களை ஷேர் செய்யக்கூடிய பழக்கம் உங்களுக்கு இருந்தால், இன்றே அதனை கைவிடுங்கள். உங்களது பிற தனிப்பட்ட விபரங்களை தவறுதலாக நீங்கள் தெரியாத நபர்களுடன் ஷேர் செய்து விட்டால், உங்களது அடையாளத்தை பயன்படுத்தி அவர்கள் மோசடிகளில் ஈடுபடுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.

அவ்வப்போது பாஸ்வோர்டுகளை மாற்றவும் 2-ஃபேக்டர் ஆதண்டிகேஷனை எனேபிள் செய்யவும்

உங்களது ஒன்லைன் அக்கவுண்ட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு எப்பொழுதும் வலிமையான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துங்கள். மேலும் உங்கள் அக்கவுண்டுகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கக்கூடிய டு ஃபேக்டர் ஆதண்டிகேஷனை எனேபிள் செய்து வைப்பது மோசடிக்காரர்களிடமிருந்து தப்பிக்க ஒரு சிறந்த வழி.

தேவையற்ற லிங்ஸ்களை கிளிக் செய்ய வேண்டாம்

உங்களுக்கு நல்ல ஒஃபர்களையும், இலவசங்களையும் வழங்கக்கூடிய லிங்ஸ்களை உடனடியாக பயன்படுத்தி விடாதீர்கள். பாதிக்கப்பட்டவர்களில் பலர் இந்த மோசடிக்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற ஆஃபர்களை வழங்கக்கூடிய லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.

இதே போன்ற மெசேஜ்களை நீங்கள் சோஷியல் மீடியாவிலும் பெறலாம். எச்சரிக்கையாக இருங்கள். உங்களது அக்கவுண்டுகளையும், பணத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top