முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல மருத்துவ குணங்கள் நிறைந்ததுடன் எல்லா காலங்களிலும் இவை இலகுவாக கிடைப்பதினால் இவற்றைப் பயன்படுத்தி பல உணவுப் பொருட்கள் செய்யப்படுகின்றன.
இப்படி வாழைப்பழத்தினைப் பயன்படுத்தி பல சுவை மிகுந்த உணவுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் சூரத் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாழைப்பழத்தினுள் Chocolate மற்றும் ஜேம் என்பவற்றை செலுத்தி விற்பனை செய்து வருவதுடன் இவரது இந்த புதுவித செய்முறையானது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த வித்தியாசமான உணவு குறித்தும் அதை எப்படி இவர் தயாரிக்கின்றார் என்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
வாழைப்பழத்தின் ஒரு பக்க முனையை வெட்டி சிறிய இயந்திரம் ஒன்றின் மூலமாக Chocolate அல்லது ஜேம் என்பவற்றை உட்செலுத்தி அதனை அவர் விற்பனை செய்து வருவதுடன் இதன் பெறுமதி இலங்கை நாணயத்தில் சுமார் 250 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.