நடிகர் சத்யராஜ் சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்து அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் தற்போது இயக்குநர் அலெக்ஸ் இயக்கும் தோழர் சேகுவேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு பி எஸ் அஸ்வின் இசையமைக்கிறார். சாம் எலன் ஒளிப்பதிவு செயகிறார்.
இத்திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அண்மையில் இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
இந்த நிலையில் தோழர் சேகுவேரா திரைப்படம் குறித்த மிக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மார்ச் மாதம் 1 ஆம் திகதி இத்திரைப்படம் வெளியாக இருப்பதாக பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.