உலகளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஒரு செயலிதான் யூடியூப். இந்நிலையில் பல புதிய அம்சங்களை அடிக்கடி அறிமுகம் செய்துவருகிறது.
இருந்தாலும் மொபைல் வெர்ஷன் யூடியூப்பிற்கும், டெக்ஸ்டாப் வெர்ஷன் யூடியூப்பிற்கும் வேறுபாடுகள் உள்ளன. டெக்ஸ்டாப் வெர்ஷனில் நீங்கள் யூடியூப் பயன்படுத்திய படி மற்ற வேலைகளை செய்யலாம்.
ஆனால் மொபைல் வெர்ஷனில் அவ்வாறு செய்ய முடியாது. மொபைல் வெர்ஷனில் ப்ரீமியம் பயனாளர்கள் இந்த வசதியை பெறலாம். ஆனால் சில யுக்திகளை பயன்படுத்தி மொபைல் வெர்ஷனில் இலவசமாக இதை செய்யலாம். ஆண்ட்ராய்ட், IOS , ஐபேட்டிலும் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
எப்படி (Video background) பார்ப்பது
யூடியூப் வீடியோ பார்க்க செயலிகளை பயன்படுத்த கூடாது. போனில் குரோம், Edge or Safari போன்ற வெப் ப்ரொளசர் பயன்படுத்தவும்.
YouTube.com என டைப் செய்து வைக்கவும். ஓப் ,ஓபன் செய்ய கேட்டாலும் அதை ஓபன் செய்ய வேண்டாம். browser இல் யூடியூப் பயன்படுத்தவும்.
இப்போது உங்களுக்குப் பிடித்த வீடியோ ப்ளே செய்யவும்.
அடுத்து டெக்ஸ்டாப் மோடுக்கு மாற்றவும். (browser செட்டிங்ஸ் மெனுவில் இருக்கும்)
மீண்டும் ப்ளே பட்டன் கொடுத்தால் background-ல் வீடியோ இருக்கும். நீங்கள் எப்போதும் போல் பயன்படுத்தலாம்.
எப்படி (Music background) பார்ப்பது
யூடியூப் வீடியோ பார்த்தது போல் தான் இதுவும். சிறிய மாற்றம் மட்டும் உள்ளது.
வெப் browserக்கு சென்று யூடியூப் பக்கம் செல்லவும்.
உங்களுக்குப் பிடித்த மியூசிக்கை தெரிவு செய்து ப்ளே செய்து டெக்ஸ்டாப் மோடுக்கு மாற்றவும்.
இப்போது உங்கள் browser ஐ மினிமைஸ் செய்யவும். மியூசிக் தொடர்ந்து ப்ளே ஆகும்.
இப்போது மினி ப்ளேயர் உங்கள் போனில் லொக் ஸ்கிரீன் பக்கத்தில் நோட்டிபிக்கேஷன் பேனலில் வரும்.
யூடியூப் வீடியோ மற்றும் யூடியூப் மியூசிக் இரண்டும் டெஸ்க்டாப் மோடில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதை இன்னும் சிறந்ததாக பயன்படுத்த உங்கள் போன் விண்டோஸ் லொக் செய்து பயன்படுத்தலாம்.