இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் நகர சட்ட ஒழுங்கு பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் போக்குவரத்து ஒழுங்கை சரிசெய்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடைத்தொகுதிக்காக குறித்த நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சில வீதிகள் மூடப்பட்டதன் காரணமாக இந்த நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் குறித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சட்ட ஒழுங்கு பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தியிருந்தார்.
குறித்த இந்த சம்பவத்தை அருகில் இருந்த சிலர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில் குறித்த உத்தியோகத்தருக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் குறித்த காவல்துறை உத்தியோகத்தருக்கு தமிழ் நாட்டு காவல்துறையின் உயரதிகாரிகள் பலரும் அவரை நேரடியாக அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.