இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 3D முறையில் சரித்திரத் திரைப்படமாக உருவாகும் 'கங்குவா' திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது .
இந்த திரைப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் நிலையில், 'கங்குவா' திரைப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் சூர்யா சமீபத்தில் நிறைவு செய்தார். இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'கங்குவா' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
''டப்பிங்' பணியின்போது திரைப்படத்தின் இறுதி தயாரிப்பைப் பார்த்த சூர்யா திருப்தி அடைந்து இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரை பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .
இந்த நிலையில் 'கங்குவா' திரைப்படம் இந்த ஆண்டின் (2024) முதல் பாதியில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது .