இருப்பினும் சில சாதனைகள் அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்படுவதுடன் அவை எல்லோராலும் பேசப்படுகின்றன. இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நான்கு மாத குழந்தை நாம் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத சாதனையை படைத்து உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
காய்கறிகள், விலங்குகள், பறவைகள் என 120ற்கும் மேற்பட்ட வித்தியாசமான பொருட்களை சரியாக அடையாளம் கண்டு இந்த குழந்தை சாதனை படைத்துள்ளது.
குறித்த குழந்தையின் திறமை ஒவ்வொன்றையும் காணொளியாக பதிவு செய்து அதனை Noble World Records குழுவினருக்கு அவரது தாயார் அனுப்பியிருந்த நிலையில் இந்த சாதனையை உலக சாதனையாக ஏற்று அதற்கான பரிசில்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
குழந்தையின் அபாரமான ஞாபக சக்தி மற்றும் அடையாளம் கண்டுகொள்ளும் திறனை பாராட்டி இந்த சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குழந்தையின் தனித்துவ திறமை ஒரு பக்கம் இருந்தாலும் அதன் குழந்தைத்தன்மை மாறாமல் ஆரோக்கியமான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என குழந்தையின் பெற்றோர் தெரிவித்து வருகின்றனர்.