தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்.
இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்.
தொடர்ந்து, சூர்யாவுடன் என்ஜிகே,சிவகார்த்திகேயனுடன் அயலான் உள்ளிட்ட படங்களிலும் ஹீரோயினாக நடித்தார்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து இரசிகர்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டவர்.
இந்நிலையில், ரகுல் பிரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை நேற்றைய நாளில் கரம் பிடித்துள்ளார்.கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில்,2021ஆம் ஆண்டில் தங்களுக்கிடையேயான உறவை அறிவித்தனர்.
இதைதொடர்ந்து, நேற்றைய தினம் இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்தியாவின் கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் ரகுல் பிரீத் சிங்கிற்கும்,ஜாக்கி பாக்னானிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.இவர்களது திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள்,நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில்,திரைப்பிரபலங்களும், இரசிகர்களும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,இந்த தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.