இவரது மகனான சஞ்சய் சினிமாவில் மிக ஆர்வமாக இருப்பதால், அதை பற்றி மேலும் படித்துக்கொள்ள அமெரிக்கா அனுப்பி வைத்தார் நடிகர் விஜய் .
படித்து முடித்த நிலையில் அவரது இயக்கத்தில் புதிய திரைப்படம் வரவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் ,அந்த திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் குறித்து பரவலாக பேசப்பட்டு வந்தது .
இந்த நிலையில் மலையாளம், தமிழ் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் கலக்கி வரும் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இருப்பினும் , இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருக்கின்றனர் இரசிகர்கள் .