சில மாதங்களுக்கு முன்பு Delete மெசேஜ் என்ற ஒப்ஷனை வட்ஸ்அப் நிறுவனம் அதன் யூசர்களுக்கு அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த அம்சம் வெளியானதில் இருந்து வட்ஸ்அப் யூசர்களுக்கு மிகவும் வசதியானதாகவும் அதிகம் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
நாம் அனுப்பும் சில வட்ஸ்அப் செய்திகளை Delete செய்வதற்கு பல காரணங்கள் இருக்கும். சிலர் தவறுதலாக செய்திகளை பிறருக்கு அனுப்பியிருக்கலாம்.
இல்லையெனில், வேறு ஏதேனும் காரணத்தினால் செய்திகளை Delete செய்து விடுவர். சில நேரங்களில், அந்த நீக்கப்பட்ட செய்திகளை அனைத்தையும் படிக்க நமக்கு ஆர்வம் ஏற்படும். எனவே, Delete செய்யப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுக்க விரும்புவோம்.
அவ்வாறு Delete செய்யப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ வழி ஒன்று இப்போது உள்ளது. ஆனால் Google Play ஸ்டோரில் மட்டுமே அதற்கான செயலிகள் உள்ளன. அவை Delete செய்யப்பட்ட செய்திகளை மீட்டெடுக்கவும் அவற்றை மீண்டும் படிக்கவும் அனுமதிக்கின்றன.
Delete செய்யப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை மீண்டும் மீட்டெடுக்க யூசர்களை அனுமதிக்கும் Notisave என்ற செயலி Google Play ஸ்டோரில் கிடைக்கிறது. சுவாரஸ்யமாக இந்த செயலி வட்ஸ்அப்பில் Delete செய்யப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுக்க மட்டும் உதவாது.
வட்ஸ்அப்பில் Delete ஆன புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் GIF களை மீட்டெடுக்கவும் உதவுகிறது. Notisave செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இதன் மூலம் Delete செய்யப்பட்ட வட்ஸ்அப் செய்திகளைப் மீண்டும் எவ்வாறு படிக்க முடியும் என்பதை பற்றியும் பார்ப்போம்.
முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள Google Play ஸ்டோருக்கு செல்லுங்கள். அதில் Notisave என்ற செயலியை Search செய்து டவுன்லோட் செய்யவேண்டும். இந்த செயலி, iOS யூசர்களுக்கு கிடைக்காது.
உங்கள் வட்ஸ்அப் செயலி எந்த மொபைலில் இன்ஸ்டோல் செய்யப்பட்டுள்ளதோ அந்த ஸ்மார்ட்போனில் Notisave செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
தேவையான விபரங்களுடன் செயலியில் உள்நுழைந்து, வட்ஸ்அப் ஐகனைக் காட்டும் Notisave செயலியின் முகப்புத் திரைக்குச் செல்லவும்.
அதில் வட்ஸ்அப் ஐகனைத் தேர்ந்தெடுத்து, Delete செய்யப்பட்ட அனைத்து செய்திகளையும் நீங்கள் காணலாம்.
மேலும் ஒரு குறிப்பிட்ட கண்டெக்ட்டை மட்டும் காண Notisave செயலி அனுமதிக்கிறது. அதற்கு பில்டர் காண்டாக்ட் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
முக்கியமான விடயம் என்னவென்றால் Notisave செயலி விளம்பரங்களுடன் வருகிறது மற்றும் இது பாதுகாப்பான பயன்பாடு அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.