மெட்டாவின் போட்டோ, வீடியோ ஷேரிங் தளமான இன்ஸ்டாகிராம் நேற்று எடிட் மெசேஜ் அம்சத்தை அறிமுகம் செய்தது. மெசேஜ் அனுப்பி 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதியை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
அதே நேரம் இன்ஸ்டாகிராம் கூடுதலாக 3 குரூப் வரை செட் பக்கத்தில் பின் செய்ய தற்போது அனுமதி அளித்துள்ளது.
எடிட் மெசேஜ் வசதி வட்ஸ்அப்பில் உள்ளது போல் செயல்படுகிறது. மெசேஜ் அனுப்பி 15 நிமிடங்களுக்குள் பயனர் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தம் செய்யலாம். Spelling Mistake, Word change என பல்வேறு முறை கூட எடிட் செய்யலாம். ஒரு மெசேஜ் எடிட் செய்யப்பட்ட பின் அந்த மெசேஜ் 'Edited' என ஹைலைட் செய்யப்படும்.
இன்ஸ்டாவில் மெசேஜ் எடிட் செய்வது எப்படி?
எடிட் மெசேஜ் அம்சம் ஆண்ட்ரோய்ட் , IOS இரண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்தைப் பயன்படுத்த இன்ஸ்டாவில் உங்கள் நண்பருக்கு முதலில் மெசேஜ் அனுப்ப வேண்டும். பின் அதில் எடிட் செய்ய, அந்த மெசேஜை long-press செய்ய வேண்டும்.
இப்போது எடிட் ஒப்ஷன் வரும். அதை பயன்படுத்தி எடிட் செய்யலாம். மெசேஜ் அனுப்பி 15 நிமிடங்களுக்குள் மட்டுமே இந்த ஆப்ஷன் பயன்படுத்த முடியும்.
பின் Chat பயன்படுத்துவது எப்படி?
இன்ஸ்டாவில் பின் செட் பயன்படுத்த Chat பக்கம் சென்று எந்த செட்டை பின் செய்ய வேண்டுமோ அந்த
செட்டின் left பக்கமாக swipe செய்ய வேண்டும். இப்போது பின் (pin) ஒப்ஷன் கொடுத்து பயன்படுத்தவும். 3 குரூப் அல்லது 3 தனிநபர் செட்களை டொப் பக்கத்தில் பின் செய்து வைக்க முடியும்.