நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைகின்ற திரைப்படம் Thug life. இது நடிகர் கமல்ஹாசனின் 234 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, ஜெயம் ரவி ,மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Thug life திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இடம்பெற்று முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் Thug life திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சேர்பியாவில் நடைபெற்று வருகிறது. அதில் த்ரிஷா, கமல்ஹாசன் ஆகியோர் நடிக்கின்ற காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சேர்பியாவில் படப்பிடிப்பு தளத்தில் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன.
இதில் படப்பிடிப்பிடிப்பு தளம் உற்பட இயக்குநர் மணிரத்னத்துடன் தொழிநுட்ப உதவியாளர்கள் மற்றும் இன்னும் பலர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் உள்ளடங்குகின்றன.