இவ்வாறான நிலையில் தற்போது தனது காதலருடன் கொண்ட உறவை முறித்துக் கொண்டதாக குறித்த பெண் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதுடன் அதற்காக அவர் கூறியுள்ள காரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு தனது காதலன் தன்னிடம் பணம் கேட்டதாகவும் இதற்கு தான் மறுப்புத் தெரிவித்ததுடன் அவரோடு கொண்டுள்ள உறவை முறித்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது காதலர் இவ்வாறு தன்னிடம் பணம் கேட்டதை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் இப்படி பணம் கேட்டதை நினைத்து தனக்கு ஆச்சரியமாகவுள்ளதாகவும் பணம் கேட்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தனது காதலர் மிகுந்த பொருட்செலவில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததாகவும் இதன் பின்னரே தன்னிடம் பணம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரவு விருந்திற்காக நிறைய செலவழித்துள்ளேன். ஆகையால் மின்சார கட்டணத்திற்கான பணத்தை கொடுக்க உனக்கு ஒன்றும் பிரச்சினை இருக்காது என்று தனது காதலன் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்டளை பிறப்பிப்பதை போன்று தன்னிடம் பணம் கேட்டமை தனக்கு மிகுந்த மனவருத்தமளித்தமையினால் அவருடன் இருந்த உறவை முறித்துக்கொண்டதாக அவர் கூறியுள்ளதுடன் இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் நகைச்சுவையாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.