எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான 'X' (எக்ஸ்), யூடியூப்க்குப் போட்டியாக long-form videos பார்ப்பதற்கான செயலியை சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் முதற்கட்டமாக 'X' நிறுவனம் இப்போது ஸ்மார்ட் டி.விகளுக்காக ஒரு பிரத்தியேக செயலியை அறிமுகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
youtube உலகின் மிகவும் பிரபலமான இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும். இதற்கு எலான் மஸ்க் X தளம் மூலம் ஒரு மாற்று தளத்தை கொண்டு வர முயற்சி செய்கிறார்.மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். ட்விட்டரின் பெயரை X என அண்மையில் மாற்றினார்.
அத்தோடு எலான் மஸ்க் X தளத்தை அனைத்து வசதியையும் உள்ளடக்கிய செயலியாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். X- “ an everything app” என்ற பெயரில் மாற்ற முயற்சிகள் இடம்பெற்று வருகிறது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக X தளத்தில் ஓடியோ, வீடியோ கோலிங் வசதி, ஜிமெயிலுக்கு மாற்றாக Xமெயில், பேமெண்ட் வசதிகள், தற்போது யூடியூப்க்குப் மாற்றாக X டி.வி செயலி ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.