வட்ஸ்அப்பில் புதிதாக செட் பில்டரிங் என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் All, Unread, மற்றும் Groups என்ற தனித்தனி ஒப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
வட்ஸ்அப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது, புதிதாக செட் பில்டரிங் என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வட்ஸ்அப்பின் ஹோம் பக்கத்தில் பயனர்கள் தங்கள் செட்களை பில்டர் செய்யலாம். தற்போது இந்த அம்சம் வட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு வெர்ஷன் 2.23.14.17-ல் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் மூலம் எளிதாக உங்கள் செட்களை பில்டர் செய்யலாம்.
இதுகுறித்து WABetaInfo கூறுகையில், இந்த அம்சத்தில் 3 பில்டர்கள் உள்ளன. All, Unread, மற்றும் Groups ஆகும். All பில்டரில் உங்கள் அனைத்து வட்ஸ்அப் செட்களும் காண்பிக்கும். Unread பில்டரில் நீங்கள் படிக்கத் தவறிய செட் மெசேஜ்கள் இருக்கும்.
Groups பில்டரில் நீங்கள் உள்ள வட்ஸ்அப் குரூப் பக்கங்களை காண்பிக்கும். இது பலருக்கும் மிகவும் பயனுள்ள அம்சமாகும். இந்த அம்சம் வட்ஸ்அப் செட் பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்ஷனுக்கு அடுத்தாக சமீபத்தில் அறிமுகம் செய்ய லொக் செட் ஒப்ஷனும், Archive ஒப்ஷனும் காணப்படுகிறது.