11 வருடங்களாக சொந்த ஊரில் இருக்கும் தனது குடும்பத்தைப் பார்க்கச் செல்லாத பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு அவரது சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை அவர் கடமை புரியும் கல்லூரியின் மாணவர்கள் செய்து கொடுத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
நாம் செய்யும் சிறு உதவி கூட பலரது வாழ்க்கையில் சந்தோஷத்தையும் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றின் மாணவர்களே தங்கள் கல்லூரியில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு இந்த நெகிழ்ச்சியான செயலைச் செய்துள்ளனர்.
நைஜீரியாவைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்களின் அனுசரணையில் தனது குடும்பத்தை காண்பதற்காக செல்லவுள்ளார்.
குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பயணத்திற்கு தேவையான விமான பயணச்சீட்டு மற்றும் சிறு தொகைப் பணம் என்பனவற்றை அவர்கள் வழங்கி வைத்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் குறித்த மாணவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.