Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
18
வெப்ப காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் ஐஸ் கட்டி...!

SooriyanFM Gossip - வெப்ப காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் ஐஸ் கட்டி...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

390 Views
பொதுவாக நம்முடைய உடலின் வெப்பநிலை குறையும்போது நம்முடைய சருமத்தின் மேற்பரப்பை நோக்கி இரத்தம் வேகமாகப் பாயத் தொடங்கும். இப்படி இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது சருமத்துக்கு பல்வேறு வகையான நன்மைகளைக் கொடுக்கும்.

சருமப் பராமரிப்பை பொறுத்தவரையில்,சருமத்தை ஆரோக்கியமாகவும் தோற்றத்தில் நல்ல மாற்றங்களுடனும் வைத்துக் கொள்வதற்கும், சரும செல்களைப் புதுப்பித்து, புத்துணர்வோடு வைத்துக் கொள்ளவும் நிறைய பராமரிப்பு முறைகளை பின்பற்றுகின்றோம்.

சருமப் பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்தினால்,நல்ல சருமத் தோற்றத்தைப் பெற முடியும்.நம்முடைய சருமத்தை அதிக வெப்பத்திலிருந்து மீட்டு, குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஐஸ் கட்டி பயன்படுத்துவது மிகச் சிறந்தது.ஐஸ் கட்டிகளைப் முறைப்படி பயன்படுத்தி எவ்வாறு மசாஜ் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஒரு சுத்தமான துணியில் நான்கைந்து ஐஸ் கட்டிகளைப் போட்டு உருண்டையாக சுருட்டிக் கொள்ள வேண்டும்.உதடு, கன்னம், தாடை, கழுத்து, நெற்றி என எல்லா பகுதிகளிலும் கட்டிகள் முழுமையாகக் கரையும் வரை வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.

சிலருக்கு அதிகப்படியான வியர்வை மற்றும் இன்னும் வேறு சில காரணங்களால் முகம் வீக்கமாக இருக்கும்.
இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு,இந்த ஐஸ் கட்டி மசாஜ் உதவுகிறது.குறிப்பாக கண்ணுக்குக் கீழே இருக்கும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

சிறிதளவு ரோஸ் வோட்டரை கொதிக்க வைத்து பின்னா் அதில் வெள்ளரிக்காய் சாறு கலந்து குளிர் சாதன பெட்டியில் வைத்து நன்கு கட்டியானதும்,முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால்,கருவளையம் ஓடிவிடும்.முகத்தில் உள்ள நுண்ணிய துளைகள் சுருங்கி அதிகப்படியான எண்ணெய் சுரப்பு கட்டுப்படுத்தப்படும்.

தக்காளி, உருளைக்கிழங்கு, எலுமிச்சை, கற்றாழை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் சாற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து,கட்டியாக மாறிய பின்னர் பயன்படுத்தலாம்.

எனவே மேற்குறிப்பிட்டுள்ள முறையின் படி வாரத்திற்கு சருமத்திற்கு ஐஸ் மசாஜ் கொடுப்பதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள், கருந்திட்டுக்கள் என்பன நீங்கி,சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top