சூர்யா மற்றும் சுதா கொங்கரா இருவரும் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக முன்பு கூட்டணி சேர்ந்து இருந்த நிலையில் மீண்டும் சூர்யா 43 திரைப்படத்திற்காக இணைவதாக அறிவித்தனர்.
அந்த திரைப்படத்திற்கு புறநானூறு என டைட்டிலும் அறிவிக்கப்பட்டது.. ஆனால் நீண்ட காலம் ஆகியும் திரைப்படம் குறித்து எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால் இரசிகர்கள் குழப்பமடைந்திருந்தனர் .
இந்நிலையில் சூர்யா அறிக்கையொன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறார். "புறநானூறு திரைப்படத்திற்காக இன்னும் நேரம் தேவைப்படுகிறது. இந்த கூட்டணி ரொம்ப ஸ்பெஷல் ஆனது, இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. எங்களது பெஸ்ட் கொடுக்க விரும்புகிறோம். விரைவில் இந்த திரைப்படத்தை தொடங்குவோம்" என சூர்யா குறிப்பிட்டு இருக்கிறார்.
இருப்பினும் சூர்யாவின் அறிக்கைப்படி, புறநானூறு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் எப்போது ஆரம்பிக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.