GeminiAI., IOS மற்றும் Google இடையே மாபெரும் ஒப்பந்தம்
SooriyanFM Gossip - GeminiAI., IOS மற்றும் Google இடையே மாபெரும் ஒப்பந்தம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
கூகுளின் ஜெமினி செயற்கை நுண்ணறிவு (GeminiAI) அம்சங்களை IOS போன்களில் வழங்க
அந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருகிறது.
ஜெமினி AI அம்சம் விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், சமீபத்தில் IOS நிறுவனம் மைக்ரோசொப்டின் ஓபன் AI அம்சங்களை வழங்க ஓபன் AI உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அறிக்கையின்படி, iOS 18 இல் AI மொடலை வழங்க திட்டமிட்டுள்ளது. ஜெனரேட்டிவ் AI அம்சங்களை வழங்க அதற்கேற்ற சக்திவாய்ந்த பங்காளர்களைத் தேடுகிறது. ஆனால், இதுவரை எந்த நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, டிம் குக் அண்மையில் , ஜெனரேட்டிவ் AI பற்றிய விபரங்கள் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.