IPL தொடரின் இன்றைய நாளுக்கான முதல் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. இன்று பிற்பகல் 3.30ற்கு பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மகாராஜா யாதவீந்திர சிங் விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.
அதிரடி துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான ரிஷப் பண்ட் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விபத்திற்குள்ளாகியிருந்ததுடன் இதில் படுகாயம் அடைந்த அவர், பல்வேறு சத்திர சிகிச்சைகளுக்கு பின்னர் தற்போது முழு உடற்தகுதியுடன் களத்துக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 14 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் களமிறங்க உள்ள அவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் இன்றைய ஆட்டத்தில் விக்கெட் காப்பாளராக செயற்படுவதில் சந்தேகம் என்றே கூறப்படுகிறது.