பெண்களுக்கு நகங்களும் ஒரு அழகு தான். ஆனாலும் நகங்கள் பல்வேறு காரணங்களால் வலிமை இழந்து உடைய தொடங்கும் இதனால் உங்கள் விரல்களின் அழகு பாதிக்கப்படுகிறது.
எனவே நகங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தினை கொடுக்கும் போது நகம் உடையும் பாதிப்பைத் தவிர்க்கலாம். எனவே நல்லெண்ணெய்யை சூடாக்கி நகங்களுக்கு மசாஜ் செய்தால் நகங்கள் பளபளப்பாக இருப்பதுடன் உடையாமலும் இருக்கும். அத்துடன் வாரம் ஒருமுறை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதுடன் நகங்களில் உள்ள அழுக்குகளையும் நீக்கவேண்டும். மேலும் நக ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிப்பதால் உங்கள் உணவில் புரதம், பயோட்டின், Vittamin A , C மற்றும் E போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
நகங்கள் பளபளப்புடன் மஞ்சள் நிறமாக மாறாமல் இருப்பதற்கு வாரத்தில் இரண்டு நாளாவது Nail Polish போடாமல் இருப்பது நல்லது.எலுமிச்சைச்சாறு சிறிதளவு எடுத்து நகங்களில் பூசிவர நகங்கள் வலிமை பெறும்.