பல நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டு அவர்கள் திறமைகளை காட்சிப்படுத்தவுள்ளதுடன் உலகளவில் மிக செல்வாக்கான இந்த பட்டத்தை எந்த நாட்டு அழகி கைப்பற்றப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகளவில் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்தாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் முதன்முறையாக சவூதி அரேபிய நாட்டின் அழகி கலந்துகொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா பெண்களுக்கு தனி கட்டுபாடுகளை கொண்டுள்ளதுடன் தனித்துவமான கலாச்சாரத்தையும் பின்பற்றி வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே அங்கு ஆட்சி முறையும் அமைந்துள்ளது.
இருப்பினும் அண்மைக்காலமாக அந்நாட்டு இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு வாகனம் செலுத்தக்கூடிய உரிமை மற்றும் ஆண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி போன்றவை அமுல்படுத்தப்பட்டன.
இந்நிலையில், தற்போது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவூதி அரேபியா சார்பாக 27 வயதான ரூமி அல் - கஹ்தானி என்ற இளம் அழகி கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் Miss and Mrs Global Asian மற்றும் Miss Asia international ஆகிய போட்டிகளில் இவர் சவூதி அரேபியா சார்பில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.