அண்மைக்காலமாக நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக பல வதந்திகள் கிசுகிசுக்கப்பட்டு வந்தது மட்டுமல்லாது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.
என்னதான் வதந்தி கிசுகிசுக்கப்பட்டு வந்த போதும் நடிகர் சித்தார்த் தரப்பிலிருந்தோ அல்லது நடிகை அதிதி ராவ் தரப்பிலிருந்தோ இந்த வதந்தி தொடர்பில் எந்தவிதமான மறுப்போ அல்லது நீங்கள் நினைப்பது உண்மைதான் என்றோ எந்தவிதமான தகவலும் அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நீண்ட காலமாக பரவி வந்த காதல் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தத் தகவல் இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் திருமணம் நடைபெற்றுள்ளது.இந்தத் திருமணத்தில் திருமணத்தம்பதிகளுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.