இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘ரத்னம்’.
இத்திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 26 ஆம் திகதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் 'second single' நாளை வெளியாகவுள்ளதாக தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.