அண்மையில் இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ள போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாதையில் மோட்டார் வண்டியினை செலுத்தியவாறே Zoom Video Call Meeting இல் பங்கேற்ற நபர் ஒருவரின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
இந்தியாவில் மிகவும் நெருக்கடி மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன நகரங்களுள் ஒன்றாக பெங்களூரு நகரம் திகழ்கின்றது.
அண்மையில் இந்த நகரத்தில் உள்ள திரையரங்கின் உள்ளே அமர்ந்து மடிக்கணனியில் பணியாற்றிய பெண்ணின் காணொளிகளும் மோட்டார் வண்டியின் பின்னால் அமர்ந்தபடியே பெண் ஒருவர் வேலை செய்த காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.
இந்த நிலையில் அண்மையில் நபர் ஒருவர் பெங்களூருவின் வாகன நெரிசல் மிக்க பாதையில் மோட்டார் வண்டியினை செலுத்தியவாறே Zoom Video Call Meeting இல் பங்கேற்றுள்ள காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த காணொளிகள் பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளதுடன் இது தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெங்களூரு நகர காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.