SooriyanFM Gossip - நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமா??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
351 Views
மனிதனுக்கு வாழ்வில் மிக முக்கியமான ஒன்று ஆரோக்கியம். சாதாரணமாகவே நாம் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்போது, அதை பற்றி அக்கறை காட்டுவது கிடையாது. நம்முடைய ஆரோக்கியம் கெட்டு விட்டால், எளிதில் அதை திரும்ப பெற முடியாது. சில நோய்களிலிருந்து குறுகிய காலத்தில் மீண்டு வந்துவிடலாம், ஆனால் பெரும்பாலான நோய்களை குணப்படுத்த சில மாதங்கள், அல்லது நீண்ட நாட்கள் கூட எடுக்கும், இதற்கு ஆரோக்கியத்தில் கவனக்குறைவே முதல் காரணம்.
நம்முடைய உடல் அமைப்பும், உடல் உள்ளுறுப்புகளின் அமைப்பும் அதன் செயற்பாடுகளை நன்கு அறிந்து, அதற்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்தால் நல்ல முறையில் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.
புரதங்கள், கொழுப்புகள், உப்பு, நீர், அனைத்தும் உடல் சீராக செயற்படுவதற்கும், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தேவைப்படுகின்றது. இவற்றில் குறைபாடு காணப்படும்போது, உடற் பாகங்களில் செயற்பாடுகள் குறைந்து, நோய் ஏற்படுகின்றது.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஊட்டச்சத்துள்ள உணவுகளை சரியான நேரத்தில் உட்கொள்வது அவசியம். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உண்ணுவதை தவிர்க்கவேண்டும்.
8 மணித்தியாலங்கள் ஆரோக்கியமான தூக்கம் வேண்டும்.
இவை அனைத்தையும் கடைப்பிடித்து வந்தால் நாம் அனைவரும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம்.