கசகசாவில் 50 சதவீதம் எண்ணெய்த் தன்மை காணப்படுவதனால் இதில் இருக்கும் கொழுப்பு பல்வேறு சுகாதார நலன்களுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
நாம் தினமும் கசகசாவை எவ்வாறு உணவில் சேர்த்துக்கொள்வது மற்றும் கசகசாவின் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
மாதுளம் பழச்சாற்றுடன் பத்து கிராம் கசகசாவை ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால் தூக்கமின்மைக்கான பிரச்சினை தீரும்.
கசகசா,முந்திரிப்பருப்பு,பாதாம் பருப்பு இவையனைத்தையும் ஒன்றாக அரைத்து தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் காலை மற்றும் மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவாகும்.
ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து நன்றாக அரைத்து பாலுடன் சேர்த்து குடித்தால் குடல் புண் பிரச்சினைகள் ஏற்படாது.
கசகசாவை இடித்த சர்க்கரை மற்றும் தேங்காய்த் துருவலுடன் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண்ணிலிருந்து நிரந்தரமாக விடுபடலாம்.
தினமும் நீரில் கசகசாவை ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து ஊற வைத்து குடித்து வந்தால் சருமப்பிரச்சினை இல்லாமல் போகும்.
எனவே மேற்குறிப்பிட்டுள்ள முறையின்படி கசகசாவை உட்கொண்டு இதனால் கிடைக்கும் நன்மைகளை பெற்று உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.