இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் பாப்பி கொண்டா (Papikonda National Park) வனப்பகுதியில் இந்த அரிதான மரங்கள் வளர்ந்து வருவதனையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த மரங்கள் அதிகளவான நீரை சேமித்து வைக்கும் திறமை கொண்டது என்று அப்பகுதியில் வசித்துவந்த பழங்குடியின மக்கள் கூறிவந்த நிலையில் இந்திய வனத்துறை அதிகாரிகள் குறித்த பழங்குடியின மக்களின் கருத்துக்களை ஆராய்ந்த போதே இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த மரத்தை வெட்டும் போது குழாய்களில் இருந்து தண்ணீர் வேகமாக வருவதைப் போல இந்த மரங்களில் இருந்து நீர் வெளியாகியுள்ளது.
குறித்த மரத்தை வெட்டிய சந்தர்ப்பத்திலிருந்து அதிலிருந்து முழுவதுமாக சுமார் இருபது லீற்றர் நீர் வெளியேறியிருந்ததுடன் இந்த வகை அரிய மரங்கள் நீர் அதிகமாக கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை சேமித்து வைக்கும் திறமை கொண்டிருந்ததை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
குறித்த அரிய வகை மரங்களில் இருந்து வரும் நீர் மருத்துவ குணம் கொண்டது என்றும் அதனை மக்கள் வெட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அரிதான இந்த வகை மரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அறிந்து கண்காணிப்புப்பணிகளை தீவிரப்படுத்தவும் இந்திய வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதுடன் இந்த மரங்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.