01. எலுமிச்சைச் சாறு மற்றும் பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் வைத்திருந்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பருக்கள் மறைந்துவிடும்.
02. அன்றாட உணவில் பழங்கள், கீரை வகைகள் , பச்சை காய்கறிகளை சேர்த்து உண்டு வந்தால் தேவையில்லாமல் தோன்றும் முகப்பருக்கள் தோன்றுவதை தவிர்க்கலாம்.
03. சந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்துவந்தால், பருத்தொல்லைகள் நீங்கும்.
04.கொழுந்து வேப்பிலையை நன்றாக அரைத்து முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர முகப்பரு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.
05. வெள்ளைப் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கி, நசுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் வைத்துத் தேய்த்த பின் 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்ய, முகப்பருக்கள் மறையும்.
06. அப்பிள் மற்றும் பப்பாசிப்பழச் சாற்றுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசிவர, பருக்கள் மறையும்.
07. முகப்பரு பிரச்சினைகளிலிருந்து விடுபட கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய், பாலாடை போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.
மேற்குறிப்பிட்ட இயற்கையான வழிமுறைகளை பின்பற்றினால் முகப்பருக்களால் ஏற்படும் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.