வட்ஸ்அப், டெலிகிராம் போன்று பேஸ்புக் மெசஞ்சரிலும் (Facebook Messenger) எடிட் ஒப்ஷன் உள்ளது.எழுத்துப் பிழை, வார்த்தைப் பிழையாக மெசேஜ் அனுப்பி விட்டால் அதை முழுவதுமாக அழித்து விட வேண்டாம், அதை எடிட் ஒப்ஷன் மூலம் எளிதாக திருத்தலாம்.
மெசேஜ் அனுப்பி 15 நிமிடத்திற்குள் எடிட் செய்ய வேண்டும். அதுவரை மட்டுமே இந்த ஒப்ஷன் எனெபிள் செய்யப்படும். இந்த ஒப்ஷன் IOS , Android இரண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்த மெசஞ்சர் சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும்.
மெசஞ்சரில் எடிட் ஆப்ஷன் எப்படி பயன்படுத்துவது?
முதலில் மெசஞ்சரில் செட் பக்கத்திற்கு செல்லவும். குறிப்பிட்ட செட் பக்கத்திற்கு சென்று எந்த மெசேஜை எடிட் செய்ய வேண்டுமோ அதை Long press செய்யவும். அடுத்து edit > select the edit option >கொடுக்கவும். இப்போது அந்த மெசேஜை எடிட் செய்யலாம்.
ஒரு மெசேஜ் அதிகபட்சமாக 5 முறை எடிட் செய்து கொள்ளலாம். மெசேஜ் எடிட் செய்த பின் அதன் கீழ் Edited என்று ஹைலைட் செய்யப்படும்.