‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன்,ஸ்டார் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் 8 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்தத் திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகின்றது.
இந்தநிலையில்,இத்திரைப்படத்தைப் பார்வையிட்ட இரசி்கர்கள், கவினின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.
இதேவேளை இந்தத் திரைப்படம் முதல் நாளில் இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாய்வரை வசூலித்த நிலையில், தற்போது இரண்டாம் நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தத் திரைப்படம் மூன்று கோடியே 80 லட்சம் ரூபாய்வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இத்திரைப்படம் வசூலில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.