வட்ஸ்அப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப,புதுப் புது வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வட்ஸ்அப் Calling வசதியில் புது அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.
அதில் வட்ஸ்அப் Calling இல் எண்ட் மற்றும் மியூட் பட்டனை ஸ்கிரீனின் கீழே இருந்து டொப் பாரில் வைக்கும் படி அப்டேட் வருகிறது. நீங்கள் அழைப்பை Minimise செய்து வைக்கும் போது இது தெரியும். புதிய அப்பேட் படி மியூட் பட்டன் ஸ்கிரீனின் மேல் இடது புறத்திலும், அதேசமயம் எண்ட் Call பட்டன் வலப்புறத்திலும் இடம் பெறுகிறது.
இதன் மூலம் பயனர்கள் Call கட் செய்ய மீண்டும் வட்ஸ்அப் ஸ்கீரினுக்கு செல்லத் தேவையில்லை. இந்த வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.