இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் சசி குமார், சூரி, உன்னி முகுந்தன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கருடன்’.
இந்தத் திரைப்படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியிருக்கிறார். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அதிகமான சண்டைக் காட்சிகளோடு உருவாகியுள்ள இத்திரைப்படம் இம்மாதம் (மே) வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில், ‘கருடன்’ திரைப்படத்தின் மிக முக்கியமான அப்டேட் இன்று மாலை 06.01 ற்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அப்டேட்டை தமிழ் சினிமா இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.