அப்படிப்பட்ட பழங்களில் ஒன்றுதான் நாவற்பழம்.இதனை நாகப்பழம் என்றும் அழைப்பார்கள். நாவற்பழத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது.அத்துடன் மலச்சிக்கலைப் போக்கும் அற்புதமான பழமாகும்.
இரத்தத்திலுள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, பற்களைச் சுத்தம் செய்வது, ஈறுகளில் இரத்தக்கசிவை நிறுத்துவது, எடையைக் குறைப்பது என நாவற்பழத்தின் நன்மைகள் அதிகமானவையாகும்.
சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கவும் மற்றும் உடலில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் தன்மையும் கொண்டது நாவற்பழம்.
இது இப்படியிருக்க, சில உணவுப்பொருட்களுடன் நாவற்பழம் இணைந்தால் எதிர்மறையான பலன்களைக் கொடுக்கும் தன்மையும் கொண்டது.
மஞ்சள் நம் உடலுக்கு மிகவும் நன்மையளிக்கக் கூடியது. ஆனால் நாவற்பழத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று வலி போன்ற ஒவ்வாமைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
நாவற்பழத்துடன் பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளைச் சேர்க்கும் போது அஜீரணம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.
ஊறுகாயுடன் நாவற்பழத்தைச் சேர்த்து உட்கொண்டால் வாந்தி, வாயு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற உடற்கோளாறுகள் ஏற்படும்.
ஆகவே நாவற்பழத்தால் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு.