மனிதன் உண்ணும் சத்தான உணவு வகைகளில் கிழங்குகளுக்கும் தனித்துவமான இடமுண்டு.
இவை பூமிக்கு அடியில் விளைவதால் அதிகளவில் உயிர்ச்சத்தைக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மிகுந்த ஆரோக்கியம் தரும் கிழங்கு வகைகளில், கருணைக்கிழங்கும் ஒன்றாகும். எனவே கருணைக்கிழங்கு தரும் ஆரோக்கியத்தைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
கருணைக்கிழங்கை உண்பதனால் மாரடைப்பு, இதய இரத்தக் குழாய்களில் காணப்படும் அடைப்புகள் என்பன தடுக்கப்படுவதோடு, உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு, உடல் எடை சீராகக் காணப்படும். அத்துடன் கருணைக்கிழங்கு எலும்புகளை வலிமையாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு எலும்புகள் வலுவிழந்து காணப்படின், கருணைக்கிழங்கை இவர்களுக்குக் கொடுக்கலாம். இதன்மூலம் எலும்புகள் பலமாகும்.
பித்தம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளவர்கள், கருணைக்கிழங்கை அடிக்கடி உண்பதனால் பித்தம் கட்டுப்படுத்தப்படும்.அத்துடன் வயிற்றில் இருக்கும் அமில சுரப்பு சீராக்கப்பட்டு, பசியின்மைப் பிரச்சினையும் நீங்கும்.
கருணைக்கிழங்கு பெருங்குடல் மற்றும் சமிபாட்டுத் தொகுதியில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி உடலைப் பாதுகாக்கின்றது.
எனவே கருணைக்கிழங்கை உணவில் சேர்த்துக்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தினை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.