தன்னுடைய தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்பால் 10 வருடங்களாக கோமாவிலிருந்த கணவரை இந்தப் பெண் மீட்டெடுத்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த இந்தப் பெண்ணின் கணவர் கடந்த 2014ஆம் ஆண்டு மாரடைப்பின் காரணமாக சுய நினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றுள்ளார். ஆனால் என்றாவது ஒருநாள் தன் கணவர் இந்த நிலையிலிருந்து மீள்வார் என்ற நம்பிக்கையை இழக்காமல், அவரின் தேவைகளை இவர் நிறைவேற்றி வந்துள்ளதுடன் அதில் தற்போது வெற்றியும் பெற்றுள்ளார்.
கோமாவில் இருந்து மீண்ட கணவருக்கு, இந்தப் பத்து வருட காலங்களில் என்னவெல்லாம் நடந்தது என்பதைப் பற்றி, இன்ப அதிர்ச்சியில் கணவருக்கு தெரிவித்து வருகிறார்.
அத்துடன், “நான் மிகச் சோர்வாக இருந்தாலும், என்றோ ஒரு நாள் நாங்கள் குடும்பமாக மறுபடியும் ஒன்றிணையும் போது, எல்லாமே மகிழ்ச்சியாக மாறிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது” என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இதேபோன்ற சம்பவம் ஒன்று கடந்த 2019ஆம் ஆண்டிலும் இடம்பெற்றுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தொன்றில் கோமா நிலைக்குச் சென்ற கணவரை, இரவு பகலாக கவனித்து வந்த அவரது மனைவி ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கும் மேலாக அவரோடு அமர்ந்தும், சுத்தம் செய்துகொண்டும், பேசிக்கொண்டும் இருந்து, ஐந்து வருடங்களுக்குப் பின், அவரை கோமா நிலையில் இருந்து மீட்டெடுத்தமை குறிப்பிடத்தக்கது.