இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, பிரபல இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய்கனிஷ்கா இயக்கியுள்ள திரைப்படம் ‘ஹிட்லிஸ்ட்’ .
விஜய்கனிஷ்கா அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்தில் சரத்குமார்,கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனிஷ்காந்த், சித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா , பாலசரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் ‘ஹிட்லிஸ்ட்’ படக்குழுவினர் நடிகர் விஜயை நேரில் சந்தித்துள்ளனர். இயக்குநர் விக்ரமன், அவரது மகன் விஜய்கனிஷ்கா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரே இவ்வாறு நடிகர் விஜயை சந்தித்துள்ளனர்.
இதன்போது நடிகர் விஜய், அறிமுக இயக்குநராக தனது முதலாவது திரைப்படத்தை இயக்கும் விஜய்கனிஷ்காவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.