நோய்களைக் குணப்படுத்தக்கூடிய திறன், கொடி வகைத் தாவரமான பிரண்டைக்கு உள்ளது. அவ்வகையில் பிரண்டையை உட்கொள்வதால் எவ்வாறான நோய்களிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதை இந்தப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிரண்டையை சிறு துண்டுகளாக வெட்டி ரசத்தில் கொதிக்க வைத்து தினமும் ஒரு கப் குடித்து வந்தால் எலும்பு வலுவடையும். அத்துடன் பிரண்டை எமது உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளையும் கரைக்கின்றது.
மூலம் சார்ந்த நோய் மற்றும் எலும்பு முறிவு, வீக்கம் உள்ளவர்கள் பிரண்டையை நெய்யில் வதக்கி அரைத்து, காலை மற்றும் மாலை நேரங்களில் சிறு உருண்டைகளாகப் பிடித்து உட்கொண்டால், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாகப் பேணலாம்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், பிரண்டையை உங்கள் உணவில் தவறாமல் தினமும் சேர்த்துக்கொண்டால் இரண்டு மாதங்களில் உங்கள் உடல் எடை குறைவதை நீங்களே காணக்கூடியதாக இருக்கும்.
இரைப்பையில் உண்டாகும் ஒவ்வாமை, அஜீரணம், பசியின்மை மற்றும் குடற்புழு உருவாகுதல் போன்ற பிரச்சினைகளில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள பிரண்டை பெரிதும் உதவுகின்றது.
பிரண்டைத் தண்டுகளை நன்கு காயவைத்து உண்பதனால் உடற் பலம் அதிகரிக்கும். எனவே பிரண்டையை வாரத்திற்கு ஒருமுறை உட்கொண்டு, எமது உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வோம்.